முட்டை விலை 10 காசுகள் உயர்வு.!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.30 ஆக விலை நிர்ணயம்.

கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் சரிவை கண்ட வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து முட்டை விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.

இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். அதன்படி, முட்டை விலை ரூ.4.20- லிருந்து 10 காசுகள் உயர்ந்து ரூ.4.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு பிறகு முட்டை விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.