அமெரிக்காவில் குழந்தைகள் பூங்காவில் ரசாயன கசிவால் 60 பேருக்கு பாதிப்பு..!
அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நீர்ப்பூங்காவில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 60 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஸ்ப்ரிங் என்ற இடத்தில் குழந்தைகளுக்காக அமைந்துள்ள நீர்ப்பூங்காவில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 60 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் எரிச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து வந்து, மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 26 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 39 பேர் சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாதிப்பு கந்தக அமிலம் மற்றும் ரசாயனத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது.