கொரோனா 3வது அலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற கிளை

கொரோனா 3வது அலையில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தல்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்க தவறிய மத்திய, மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு தலைமையில் வந்தது. அப்போது, ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனா 3வது அலையில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்து இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

இதனிடையே, அந்த மனுவில், கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்களுக்கு அபதாரம் விதிக்கவும், கொரோனா ஆராய்ச்சி நிலையங்களை அதிகரிக்கவும், ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடை பிடிக்குமாறு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என கடந்த மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்