கைதான கொள்ளையர்களை காவலில் விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி.!

முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலக கொள்ளை வழக்கில் கைதான 7 பேரை காவலில் விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலக கொள்ளை வழக்கில் கைதான 7 பேரை காவலில் வைத்து விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 12 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரிய நிலையில், 10 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

ஓசூரில் கடந்த 22-ஆம் தேதி முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலத்தில் துப்பாக்கி முனையில் ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகை கொள்ளை வழக்கில் தப்பிய 9 பேரில் 7 பேரை தெலுங்கானாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான 7 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்