ஆபத்திலும் அசால்ட்டாக விளையாடும் இளைஞர்கள்!

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக உயர்ந்து வருகிற நிலையில், ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்கள்.  

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இணையதளம் எனும் வலையில் சிக்கி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் பெரும்பாலான இளைஞர்கள் தற்போது செல்பி எனும் மாய வலையில் சிக்கி உள்ளன. செல்ஃபி எடுக்கிறோம் என்று பல ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுத்து, தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பல ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இதனால் ஏரியை காண சுற்றுவட்டார மக்கள் அங்கு படையெடுத்து வருகின்றன. முன்னதாக ஏரிக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்குமாறு, போலீசார் குவிக்கப்பட்டு இருந்தபோதுகூட மாற்று வழியில் ஏரியின் மதகுக்கு வரும் மக்கள், செல்பி எடுத்து  வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment