மாரடைப்பு ஏற்படாமல் இருக்க இந்த பழத்தை சாப்பிடுங்க!

Default Image

சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள்.

இன்று நாம் அனைவரும் பல வகையான பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சீத்தாப்பழத்தில் உள்ள உடல் ஆரோக்கியத்தை மேம்மடுத்தக் கூடிய நன்மைகள் பற்றி  பார்ப்போம்.

இரத்தம்

சீதாப்பழ இரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள், இரத்தத்தை விருத்தி செய்வதுடன், இரத்த சோகை நோயையும் குணப்படுத்துகிறது. மேலும் இந்த பழத்தில் குளுக்கோஸ் உள்ளதால்,  உடல் சோர்வை அகற்றி, சுறுசுறுப்பை அதிகரிக்கிறது.

மாரடைப்பு

சீத்தாப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளது. மேலும், இந்த பழத்தில் மெக்னீசியம் சத்து அதிகமாக காணப்படுவதால், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

ஆஸ்துமா

இன்று வயதானவர்களில் அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் ஒன்றாக ஆஸ்துமா உள்ளது. இந்த பழத்தில் உள்ள வைட்டமின் பி சத்துக்கள் ஆஸ்துமா சம்பந்தமான பிரச்னை ஏற்படாமல் தடுக்கிறது.

நினைவாற்றல்

இன்று பலருக்கும் உள்ள நோய்களில் ஞாபக மறதி என்ற நோய் அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில், இப்பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால்,  நினைவாற்றல் அதிகரிக்க செய்கிறது.

மலசிக்கல்

மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இந்த பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி இந்த உணவை சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்