இந்த மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயங்காது.! ஆட்சியர் அதிரடி.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாளை பேருந்து இயங்காது. பேருந்து இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மற்ற இரு மண்டலங்களை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நாளை முதல் பொதுப்போக்குவரத்து சேவை 50 சதவீத பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
அதன்படி, அனுமதி அளிக்கப்பட்டுள்ள மண்டலங்களில் பேருந்து இயக்க வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாளை பேருந்து இயங்காது. பேருந்து இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.