பொதுமக்களை யாரும் அடிக்காதீர்… நிலமையை எடுத்து கூறுங்கள்… காவல் உதவி ஆணையாளர் ராஜேந்திரன் காவலர்களுக்கு அறிவுரை..

Default Image

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தமிழகத்தில் தடுக்க தமிழகம் முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த சமயத்தில் பொதுமக்கள்  சிலர் வெளியே சென்று வருகிறார்கள். இவர்களை  சில இடங்களில் காவல்துறையினர்  அத்துமீறி நடந்து பொதுமக்களை லத்தியால் அடித்ததாக பல புகார்கள்  எழுந்துள்ளது. இதேபோல் பலர் லத்தியால் அடிவாங்கிய  பல காணொளிகள்  வீடியோகவும் வைரலாகியும்  வருகிறது. இந்நிலையில்,  பொதுமக்களை லத்தியால் அடிக்காதீர்கள் என்று காவல்துறையினருக்கு சென்னை பூக்கடை காவல் உதவி ஆணையாளர் ராஜேந்திரன் அவர்கள்  ஆடியோ மூலம் அறிவுரை வழங்கி உள்ளார். அந்த ஆடியோவில் அவர்,  வாகன சோதனையில் ஈடுபடும் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் என யாரும் கையில் ‘லத்தி’ (கம்பு) வைத்திருக்க கூடாது என்றும்,  நம்முடைய நோக்கம் 144 தடை உத்தரவை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் அது  எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல வேண்டும் என்பது மட்டுமே.

போலீசார் கையில் லத்தி எடுக்க தடை ...

அதைவிட்டு விட்டு சாலையில்  செல்லும்  பொதுமக்களை  திட்டுவதோ, அடிப்பதோ நல்லதல்ல. இது ஒன்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கிடையாது. எனவே இந்த தடை உத்தரவை மக்களுக்கு புரிய வையுங்கள். அங்கு நிற்கும் காவலர்  ஒருவரை மக்களிடம் பேச சொல்லுங்கள். தேவையில்லாமல் வெளியே வருவதால் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். இது எப்படி உங்கள் குடும்பத்தினரை பாதிக்கும் என்பதை எடுத்து சொல்லுங்கள். கைகழுவும் அவசியத்தை பொதுமக்களுக்கு சொல்லுங்கள், இப்படி சொன்னாலே  போதும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். உங்களுக்காகதான் நாங்கள் பணியில் இருக்கிறோம் என்றும்  எங்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று சொல்லுங்கள். எக்காரணம் கொண்டும் நாம் நமது சமநிலையை இழந்து விடக்கூடாது. நாம் பொதுமக்களிடம் தேவையில்லாமல் சண்டை போட்டால் நமக்குதான் அவப்பெயர் ஏற்படும். எனவே அவை தவிர்க்க வேண்டும். எனவே பொதுமக்களுக்கு அறிவுரையை கூறி தற்போதைய சூழலை புரிய வையுங்கள். அதேபோல் பொதுமக்கள் யாரையும் காவலர்கள் தரக் குறைவாக பேசக் கூடாது என்று அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்