கொரோனா அச்சத்தை தவிர்க்க கொரோனா பர்கர்! உணவகத்தின் புதிய வழிமுறை!

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அதனை போக்குவதற்காக அந்த வைரஸ் வடிவிலான தோசை, போண்டா என சில உணவுப் பொருட்கள் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது வித்தியாசமான முறையில் இனொரு உணவு பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அது என்ன என்று தெரியுமா?

வியட்நாமில் உள்ள ஒரு உணவகத்தில் கொரோனா அச்சத்தால் தவிக்கும் மக்களின் மன நிலையை மாற்றுவதற்காக மன உளைச்சலை குறைப்பதற்காகவும் கொரோனா வடிவிலான பர்கர் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதனுள் தக்காளி, முட்டைகோஸ், இறைச்சி ஆகியவை வைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. இதை சாப்பிடும் பொழுது கொரோனாவை வென்றநேர்மறையான எண்ணம் உருவாகும் எனவும்,  அச்சம் நீங்கும் எனவும் கடையின் உரிமையாளர் குவாங்டன் கூறியுள்ளார். 

author avatar
Rebekal