கடைசி இரண்டு பக்கங்களை படிக்காத நிர்மலா சீதாராமன்.! காரணம் என்ன தெரியுமா …?

  • நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த முறை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை பட்ஜெட் தாக்கல் செய்தார்.
  • கடைசி இரண்டு பக்கங்கள் இருக்கும் போது அவரால் உரையாற்ற முடியாமல் உடல் நலம் லேசாக பாதிக்கப்பட்டது.இதனால் கடைசி இரண்டு பக்கங்களையும் படிக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் என்ற சிறப்பை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட் உரையை சுமார் இரண்டரை மணி நேரம் வரை உரையாற்றிய நிர்மலா சீதாராமனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடைசி இரண்டு பக்கங்களை மட்டும் அவரால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டாவது முறையாக நாட்டின் நிதி நிலை அறிக்கையை  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.

கடந்த முறை 2 மணி நேரம் 17 நிமிடங்கள் வரை பட்ஜெட் தாக்கல் செய்தார்.இந்த முறை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை பட்ஜெட் தாக்கல் செய்தார்.இந்நிலையில் கடைசி இரண்டு பக்கங்கள் இருக்கும் போது அவரால் உரையாற்ற முடியாமல் உடல் நலம் லேசாக பாதிக்கப்பட்டது. இதனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தொடர்ந்து பேச முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடைசி இரண்டு பக்கங்களையும் தான் படித்ததாக கூறும்படி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம்  அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

author avatar
Dinasuvadu desk