உள்ளாட்சி தேர்தல் குதிரை பேரம்..திமுக உடன் பிறப்புகள் நூதன முறையில் எதிர்ப்பு.. திகைத்துப்போன திமுக தலைமை …

  • புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர்  பதவிகளுக்கு, திமுக உறுப்பினர்களை அதிமுகவிற்குத் தாரைவார்த்துக் கொடுத்த திமுக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு நன்றி.
  • இதுபோன்ற கழகப் பணிகள் தொடர திமுக தொண்டர்கள் சார்பில் நன்றி! நன்றி! நன்றி என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

      புதுக்கோட்டை மாவட்டத்தப்பொருத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 22 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் திராவிட முண்ணேற்ற கழகம் 11 இடங்களையும், அண்ணா திராவிட முண்ணேற்ற கழகம் 8 இடங்களையும், காங்கிரஸ் , தமாகா 1 ஆகிய இடங்களைப் பிடித்தது.

Image result for ரகுபதி திமுக

திமுக கூட்டணி கட்சிகளுடன்  சேர்த்து, 13 உறுப்பினர்கள் இருந்ததால், திமுகவினருக்கே  மாவட்ட தலைவராகும்  வாய்ப்பு அதிகம் இருந்தது. இந்நிலையில் தான், மறைமுகத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஜெயலெட்சுமி என்பவர் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.இதில், பல லட்சம் ரூபாய்க்குக் குதிரை பேரம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியுடன் சேர்த்து மொத்தம் 13 உறுப்பினர்கள் இருந்த நிலையில் 10 வாக்குகள் மட்டுமே  அந்த கூட்டணி கட்சிக்கு கிடைத்திருக்கிறது.

 

Image result for RAGUPATHI DMK

இதனால், விரக்தியடைந்த ஒரு சில திமுக உடன் பிறப்புகள் நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றனர். இந்தலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாவட்டச் சேர்மன் வாய்ப்பு திமுக மாவட்ட பொறுப்பாளரான எம்.எல்.ஏ ரகுபதியால் தான் விட்டுப்போனதாகவும், எனவே அந்த சுவரொட்டியில், ” புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணிகள் அதிக இடங்கள் பிடித்தும், மாவட்ட ஊராட்சித் தலைவருக்கு மாவட்ட உறுப்பினர் 3 நபரை அதிமுகவிற்குத் தாரைவார்த்துக் கொடுத்த, தளபதியின் நம்பிக்கை நட்சத்திரம், முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளர், திருமயம் சட்டமன்ற உறுப்பினரான திரு. ரகுபதி அவர்களுக்கு நன்றி நன்றி என அச்சிடப்பட்டுள்ளது. இந்த அகிம்சை வழியில் உடன் பிறப்புகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் திமுக வினரிடையே பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Kaliraj