ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய கோமதி மாரிமுத்து..! நடந்தது என்ன.?
தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து இந்திய தடகள வீராங்கனையாக வளம் வருபவர்.இவர் தோகாவில் நடந்த தடகள போட்டியில் ஊக்கமருந்து உட்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்.
இந்நிலையில் தான் அந்த போட்டியின் போது அவருக்கு ஊக்க மருந்து பரிசோதனை செய்யபட்டது.இதில் தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு ஊக்க மருந்தை பயன்படுத்தியாக தெரிகிறது.இதனால் அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் இவருக்கு ‘பி’ மாதிரியிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உண்மை என்று கண்டறியும் பட்சத்தில் நான்கு வருடம் போட்டியில் அவருக்கு விளையாட தடை விதிக்கப்படும். மேலும் அவருடைய தங்க பதக்கமும் பறிக்கபடும் என்று தெரிகிறது.
இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி கூறுகையில்..,
கோமதி ஊக்கமருந்து பயன்படுத்தியாக வரும் செய்திகள் முற்றிலும் வதந்தி,மேலும் இந்திய தடகள சம்மேளத்திடம் இருந்து இது போல் எந்த வித தகவலும் எங்களுக்கு இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார். கோமதி மாரிமுத்துவின் மீது வைக்கபட்டுள்ள இந்த குற்றச்சாட்டு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.