பராமரிப்பு பணிக்காக அதிகப்படியான குடிநீரை வீணாக்கிய சேலம் மாநகராட்சி!

கோடை கால வெயில் வாட்டி வதைக்கும் வெளியில் சேலத்தில் அதிகமான குடிநீரை வீணாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கோபத்துக்குள்ளாகியுள்ளது.

வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான நீர்நிலைகள் வற்றி விட்டன. ஆதலால் மக்கள் தண்ணீருக்காக மிகவும் கஷ்டப்படுகின்றனர். குடிநீருக்காக பல பகுதிகளில் மக்கள் வெகுதூரம் சென்று எடுத்து வரவேண்டிய சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து ரோடு பகுதியில் பாலம் பராமரிப்பு பணிக்காக அங்கிருந்த குடிநீர் குழாயில் உள்ள அனைத்து நீரையும் வெளியேற்றினர். இதனால் அதிகப்படியான நீர் வீணானது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, பராமரிப்பு பணிகளின் போது இவ்வாறு நடப்பது சகஜம் தான் என தெரிவித்தனர். இருந்தாலும் இந்த நீரை சேமிக்க வேறு வழி யோசித்திருக்கலாம் என மக்கள் கூறிவருகின்றனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment