தமிழகத்தில் மட்டுமே டெங்குவால் மாதம் 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆண்டு இல்லாத வகையில் இந்தாண்டு இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் இதுவரை 1.40லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 216 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் டெங்குவால் தமிழகத்தில் 20141பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை மத்திய அரசு தெரிவித்துள்ளது.