ட்விட்டர்-ல் தினமும் 90 பில்லியன் பதிவுகள் .! எலோன் மஸ்க்

ட்விட்டர்-ன் உரிமையாளரான எலோன் மஸ்க் ட்விட்டர் தளமானது தினமும் 90 பில்லியன் பதிவுகளை வழங்குகிறது என்று கூறியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனமானது தற்பொழுது தினமும் 90 பில்லியன் பதிவுகளை வழங்குகிறது என எலன் மஸ்க் கூறியுள்ளார்.மேலும் இந்த பதிவுகளுக்கு வரும் பார்வையாளர்களை எண்ணிக்கையை வைத்து ட்விட்டர் தளமானது இன்னும் நம்பமுடியாத வகையில் இயங்கி வருவது தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

கடந்த மாதம், மஸ்க் ட்வீட் செய்திருந்தார், அதில் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ட்விட்டர் ஒரு பில்லியனைத் தாண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும், மைக்ரோ-பிளாக்கிங் தளம், மஸ்க் கையகப்படுத்திய பிறகு, உள் குழப்பங்களுக்கு மத்தியில் பல விளம்பரதாரர்கள் மேடையை விட்டு வெளியேறிய போதும், அதன் தினசரி பயனர் வளர்ச்சி “எல்லா நேரத்திலும்” உயர்ந்துள்ளதாக ட்விட்டர் அதன் விளம்பரதாரர்களிடம் கூறியது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment