ஒன்னு இல்ல., ரெண்டு இல்ல., 8 மனைவிகள்.! ஒரே வீட்டில் வாழும் காதல் மன்னன் ..!

தாய்லாந்தைச் சேர்ந்த ஓங் டாங்  சோரூட் என்பவர் 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்.

தாய்லாந்தின் இளம் டாட்டூ ஆர்ட்டிஸ்ட் ஓங் டாங்  சோரூட் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில்  பேசப்படும் நபராக உள்ளார். காரணம் அவரது டாட்டூ கலை அல்ல..,  சோரூட்டிற்கு  8 மனைவிகள் உள்ளனர். அந்த மனைவிகளுடன் சோரூட் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.  கடந்த வாரம் அவர் தாய்லாந்தில் ஒரு நகைச்சுவை தொலைக்காட்சி சேனலுக்கு சோரூட் தனது எட்டு மனைவிகளுடன் பேட்டி அளித்தார்.

அதன் பிறகு மக்கள் அவரைப் பற்றி இணையத்தில் தேடத் தொடங்கினர். தற்போது,​​ சோரூட்டும் அவரது எட்டு மனைவிகளும் தினமும் சில புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

மகிழ்ச்சியான குடும்பம்:

தாய்லாந்தின் பாரம்பரிய டாட்டூ கலையான ‘யந்த்ரா’வில் சோரூட் தலைசிறந்தவர். இவர் எட்டு மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு மனைவிக்கும் அவரவர் தகுதி இருப்பதாக சோரூட் கூறினார்.  8 பெண்களையும் எப்போது, ​​எப்படி சந்தித்தார். பிறகு எப்படி திருமணம் நடந்தது என்பதையும் அவர் கூறினார்.

அதன்படி, முதல் மனைவியின் பெயர் நோங் ஸ்ப்ரைட். நண்பனின் திருமணத்தில் அவளை சந்தித்ததாவும், 2-வது மனைவியின் பெயர் நோங் எல், நான் அவரை சந்தையில் சந்தித்தேன். மூன்றாவது மனைவியின் பெயர் நோங் நான். மருத்துவமனையில் சந்தித்தேன். நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது மனைவிகள் சமூக ஊடக தளங்களில் தொடர்பு கொண்டேன் எனவும்  ஏழாவது மனைவி கோவிலில் தரிசனத்தின் போது சந்தித்ததாக தெரிவித்தார்.

எட்டாவது மனைவியைச் சந்திப்பது பற்றிய சுவாரஸ்யமான கதை அவர் கூறினார். ,“நான் எனது நான்கு மனைவிகளுடன் விடுமுறையை அனுபவித்துக்கொண்டிருந்தேன். அங்கு  8-வது மனைவியை சந்தித்ததாக தெரிவித்தார்.

முதல் மனைவியிலிருந்து ஒரு மகன்: 

 சோரூட் வீட்டில் 8 மனைவிகள் தவிர ஒரு குழந்தையும் உள்ளது. இந்தக் குழந்தையின் தாய் சோரூட்டின் முதல் மனைவி. இன்னும் சில நாட்களில் மேலும் குழந்தை அலறல் சத்தம் கேட்கப் போகிறது. காரணம் சோரூட் 2-வது மனைவி கர்ப்பமாக உள்ளார். வீட்டில் நான்கு படுக்கையறைகள் உள்ளன. ஒவ்வொரு படுக்கையறையிலும் இரண்டு பெண்கள் தங்கி உள்ளனர். ஒன்றாக வாழ்வதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவர்களுக்குள் எதற்கும் சண்டை இல்லை என்றும் அனைவரும் கூறினார்.

author avatar
Castro Murugan