74 வது குடியரசு தின கூகுள் டூடுல்..! பின்னணியில் உள்ள கலைஞர் யார்.?

இந்தியாவின் 74-வது குடியரசு தின கூகுள் டூடுல் படத்தை உருவாக்கியவர், பேப்பர்கட் கலைஞர் பார்த் கோதேகர் ஆவார்.

இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா வெகுவிமர்சையாக நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த ஒரு முக்கிய நிகழ்வு நடந்தாலும் கூகுள் தரப்பிலிருந்து அதன் முக பக்கத்தில் சிறப்பு டூடுல் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை பிரதிபலிக்கக் கூடிய சிறப்பு டூடுல் முக பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

Google Doodle 1
Image Source Google DoodleParth Kothekar
டூடுல் படத்தை உருவாக்கியவர் யார்.? :

இந்த டூடுலில் உள்ள படத்தை அகமதாபாத்தைச் சேர்ந்த பேப்பர்கட் கலைஞர் பார்த் கோதேகர் உருவாக்கியுள்ளார். அவரது கையால் வெட்டப்பட்ட காகிதத்தை வைத்து உருவாக்கிய இந்த சிறப்புமிக்க வரைபடத்தை கூகுள் தனது டூடுலுக்கு தேர்ந்தெடுத்துள்ளது. பார்த் கோதேகர் கத்தியைப் பயன்படுத்தி வெட்டப்பட்ட காகிதத்தை வைத்து சிக்கலான உருவங்களை செய்வதில் வல்லுநர்.

parth kothekar
Parth Kothekar Image Source Google DoodleParth Kothekar
லட்சிய பாதைக்கான தேடல் : 

2010 ஆம் ஆண்டு தனது படிப்பை கைவிட்டு அவரது லட்சியமான பேப்பர்கட் கலையை முழுநேர வேலையாக செய்ய முடிவு செய்தார். 2013 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் உள்ள கனோரியா கலை மையத்தில் தனது முதல் 100 படைப்புகளை அனைவரும் பார்க்கும் வகையில் முதல் கண்காட்சியை நடத்தினார். இந்த கண்காட்சி அவரது வாழ்க்கையில் முன்னோக்கி செல்லும் பாதையை உருவாக்கியது.

parth kothekar Papar cutting
Image Source Youtubeparth kothekar
திறமையை காண்பிக்க அழைப்பு : 

மற்றவர்களிடம் போட்டியிடுவதை விட தனக்கே சவால் விட்டு அவரது பணிகளை மேற்கொள்வார். இவரது படைப்புகளில் அனிமேஷன்கள், 3D விளக்குகள், உருவப்படங்கள் மற்றும் பல அடங்கும். அவர் உருவாக்கும் ஒவ்வொரு படைப்புக்கும் அவர் எழுதும் கட்டுரைகள் மிகவும் தனித்துவமானதாக இருக்கும். 2016 ஆம் ஆண்டில் பார்த்தின் திறமையை காண்பிக்க நியூசிலாந்து அரசாங்கம் அவரை அழைத்தது. அவரது படைப்புகள் சர்வதேச அளவில் காட்சிப்படுத்தப்பட்டு லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Parth Kothekar (@parthkothekar)

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment