மேற்குவங்கத்தில் துர்கா பூஜையின் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 7 பேர் பலி

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியிலுள்ள மால் ஆற்றில் துர்கா பூஜையின் போது ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியிலுள்ள மால் ஆற்றங்கரையில் நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற துர்கா பூஜையில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று வழிபட்டனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏராளமான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். மீட்புக்குழுவினர், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்பைகுரி மாவட்ட மாஜிஸ்திரேட் மௌமிதா கோதாரா அளித்த தகவலின் படி, மீட்கப்பட்ட 50 பேர்களில் 7 பேர் உயிரிழந்ததாகவும் சிலபேருக்கு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குகுவினர்,மக்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில், வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து வந்த செய்தி வருத்தமளிப்பதாகவும், வெள்ளத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மாஜிஸ்திரேட்டிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment