அக்.9-ம் தேதி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் – பாமக தலைவர் அன்புமணி

அக்.9-ம் தேதி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு.

காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பசுமைத்தாயகம் சார்பில் 9-ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள, காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்தி, போர்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் காலநிலை செயல்பாட்டுக்கான சென்னை ஓட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment