புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைப்பு.!

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதாக தொடர்பாக  உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதாக தொடர்பாக  ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை வழங்க 2 குழு அமைக்கப்படும் என சமீபத்தில் முதல்வர் அறிவித்து இருந்தார். அதன் அடைப்படையில் தற்போது  உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்ட்டுள்ளது.

இந்த குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி நெல்லை மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி , அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன் , காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் தாமரைச்செல்வி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் கொள்கையை பின்பற்றி புதிய கல்விக்கொள்கையை எவ்வாறு அமல்படுத்துவது மற்றும்  மாற்றம் கொண்டுவருவது என ஆய்வு செய்து இந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan