வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறையா..? வங்கி விளக்கம்..!

வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை என வெளியாகும் தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் கடந்த வாரம் நடத்திய போராட்டம் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்கவில்லை. இதற்கிடையில், இன்று முதல் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை இடையிலான 9 நாள்களில் 7 நாள்கள் வங்கிகள் விடுமுறை என சமூக வலைத்தளங்களில் செய்திகள் தகவல் வெளியானது.

இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,  இதுகுறித்து வங்கி விளக்கம் அளித்துள்ளது . அதில், வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை என வெளியாகும் தகவல் வதந்தி. இன்று சனிக்கிழமை, நாளை  ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. ஒரு மாதத்தில் 2 மற்றும் 4 வது வாரம் வங்கி விடுமுறை.

29-ஆம் தேதி ஹோலி பண்டிகை என்பதால் வட மாநிலங்களுக்கு மட்டுமே விடுமுறை. மார்ச் 30-ஆம் தேதி பாட்னாவில் மட்டும் வங்கி விடுமுறை. அதேபோல மார்ச் 31-ஆம் தேதி நிதியாண்டு முடிவு என்பதாலும், ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் வங்கி முழுவருட கணக்கு முடிவு என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால்  அன்றும் விடுமுறை எனவும் மற்ற  நாட்களில் வங்கிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan