புதிய கல்விக் கொள்கை.. நாட்டின் GDP-ல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது- கமல்!

நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. அது, பல்வேறு அறிவிக்களை கொண்டதாகவும், கல்வி முறையில் பெரிய மாறுதல்களை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றது.

இதற்க்கு பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

மேலும் அந்த பதிவில், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டுமெனவும், மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்திலிருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது என கருத்து தெரிவித்துள்ளார்.