கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 6 சிறுவர்கள்.! காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை…

கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர். 

18க்கு வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களை அரசு கூர்நோக்கு இல்லமான சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க படுவர்.

தப்பியோட்டம் :

கடலூர் மாவட்டம் கோண்டூர் பகுதியில் செயல்ப்பட்டு வரும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு முகாமில் இருந்த சிறுவர்கள், நேற்று இரவு தப்பிவிட்டனர்.

ரோந்து பணி :

6 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் தப்பிவிட்ட செய்தி அறிந்ததும், இரவும் முழுவதும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திருந்த 2 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்து உள்ளனர்.

தேடுதல் பணி :

அந்த 2 சிறுவர்களும், கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியவர்கள் என தெரியவந்து அவர்களை போலீசார் பிடித்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.  மீதமுள்ள 4 சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment