இந்தியாவில் அக்.1 முதல் 5ஜி சேவை – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். 

இந்தியாவில் அதிவேக அலைக்கற்றையான 5ஜி சேவையை வரும் அக்டோபர் 1ம் தேதி டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில்’ தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பிராட்பேண்ட் மிஷன் ட்வீட்டில், “இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் இணைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவார் என தெரிவித்துள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப மன்றம் எனக் கூறும் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC), தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் இந்தியாவின் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஜூலை 26-ஆம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் – ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்குபெற்றன.

இதில் முதல் நாள் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டனர். இதுவரை மொத்தம் ரூ.1,50,173 கோடி ஏலத்தை மத்திய அரசு பெற்று இருக்கிறது. இதையடுத்து, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதாக தெரிவித்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment