உலகளவில் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு – அமேசான் அறிவிப்பு..!

அமேசான் வரவிருக்கும் மாதங்களில் உலகளவில் 55,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது என்று தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸி கூறினார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பெரிய அளவில் வேலைகளை கொடுக்கப்போகிறது. அமேசான் நிறுவனமானது உலக அளவில் 55,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளது.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாஸ்ஸி இந்த வேலை வாய்ப்பு குறித்து செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். ஜூலையில் அமேசானின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான பிறகு தனது முதல் நேர்காணலில், சில்லறை, கிளவுட் மற்றும் விளம்பரம் உள்ளிட்ட பிற வணிகங்களின் தேவையை பூர்த்தி செய்ய அமேசான் நிறுவனத்திற்கு அதிக ஊழியர்கள் தேவை என்று ஜெஸ்ஸி கூறினார்.

இந்த 55 ஆயிரம் பேரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் அமெரிக்காவிலும் மற்றவர்கள் இந்தியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஜெஸ்ஸி அறிவித்தார். அமேசான் தொழில் நாள் செப்டம்பர் 16, 2021 அன்று காலை 10:00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கயுள்ளது.

எப்படி பதிவு செய்வது..?

நீங்கள் https://www.amazoncareerday.com/india/home  என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு Register Now என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதன்பிறகு வரும் ஒரு படிவம் திறக்கப்படும் அதை முழுமையாக நிரப்ப வேண்டும்.

author avatar
murugan