மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகாரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 5,318 பேர் பாதிப்பு!

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 5,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 5,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,59,133 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று ஒரே நாளில் 208 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,139 ஆக உயர்ந்துள்ளது. அதில், 4,430 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,245 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அங்கு 67,600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.