51-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா தேதி அறிவிப்பு.!

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI), இந்திய அரசின் திரைப்படத்துறையால் கடந்த 1952-ம் ஆண்டு முதன் முறையாக மும்பையில் நடைபெற்றது. அதன் பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் நடந்துள்ளது.

 இந்நிலையில், 51-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 2013 -ம் ஆண்டு நடைபெற்ற 44 -வது மற்றும் கடந்த ஆண்டு  நடைபெற்ற 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவும் கோவாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan