50 GB டேட்டா இலவசம் – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!

50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை யாரும் ஓபன் செய்ய வேண்டாம்  காவல்துறை எச்சரிக்கை. 

தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் இன்று அனைவரது கைகளிலுமே ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் தவழ்கிறது. இந்த நிலையில் எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது மக்களை எளிதாக சென்று விடுகிறது. ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்தி பலர் மோசடிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இப்படிப்பட்ட மோசடி கும்பல்களிடம் சிக்கி பலர் ஏமாந்துள்ளனர்.

இந்த நிலையில் பொதுவாகவே காவல்துறை தரப்பில் தங்களது தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் எந்த ஒரு லிங்கையும் நம்பி அதன் உள்ளே சென்று விடாதீர்கள் என்றும் அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீப காலமாக உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறுவதையடுத்து இந்த போட்டியை காண 50 GB டேட்டா இலவசமாக வழங்கப்படுகின்றது என்ற செய்தி இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது. இதனை நம்பி பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை யாரும் ஓபன் செய்ய வேண்டாம். இதன் மூலம் ஹேக்கர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும்.  எனவே இதனை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளை கண்டால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment