அடுத்த வாரம் தேர்தல்.. முன்கூட்டியே வாக்களித்த 5.8 கோடி அமெரிக்கர்கள்!

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், முன்கூட்டியே இதுவரை 5.8 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும், இன்னும் சில நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிடுகின்றனர். இருவரும் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் தேதிக்கு முன்பாகவே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் உள்ளது. இதனால் பொதுமக்கள் பலர், ஆர்வமாக வந்து வாக்களித்து செல்கின்றனர். அந்தவகையில் அமெரிக்காவில் இதுவரை 5.87 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது, கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட அதிக வாக்குகளாகும். இதனால் வாக்குகள் எண்ணும் நேரம், சில மணிநேரம் நீடிக்கப்படவும் வாய்ப்புள்ளது.