ஒரே கிராமத்தில் 44 பேருக்கு தொற்று உறுதி…! 12 மணி நேரம் காத்திருந்த நோயாளிகள்…!

  • நீலகிரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
  • ஒரே கிராமத்தில் 44 பேருக்கு தொற்று உறுதி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட, எஸ் எஸ் நகர் பகுதியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 44 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சுகாதாரத்துறையினர் நோயாளிகள், தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கூறி உள்ளனர்.

இந்நிலையில் 12 மணிநேரத்திற்கு மேலாக நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல் தாமதப்படுத்தியதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து, நோயாளிகள் வீடுகளை விட்டு வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் பெண்களை மட்டும் அழைத்து செல்வதற்காக இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.