Bihar Elections: தொடங்கியது 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு.. ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்!

பீகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 7 மணி முதல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும் பதிவாகியிருந்தது.

இதனை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான மூன்றாம் கட்ட வாக்குபதிவு  இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. இன்று, 19 மாவட்டங்களில் உள்ள 78 சட்டசபை தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. தேர்தலில் 72 தொகுதிகள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. களத்தில் 1204 வேட்பாளர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் முதல் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்த நிலையில், இன்று பொதுமக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து கொண்டு வருகின்றனர்.

மேலும் வாக்கு எண்ணிக்கை, இம்மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.