இராமன் விளைவை கண்டறிந்த S.V.ராமனின் 132 ஆவது பிறந்தநாள் இன்று!

ஒளியின் அலைநீள மாற்றத்தை கண்டறிந்த S.V.ராமனின் 132 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

நவம்பர் 7 ஆம் தேதி 1888 ஆம் ஆண்டு பிறந்த புகப்பெற்ற இந்திய அறிவியலாளர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் 132 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. திருச்சிராப்பள்ளியில் பிறந்து வளர்ந்த இவர் இயற்பியல் துறையில் வியத்தகு சாதனைகளை படைத்தவர். பொருளின் ஊடே செல்லும் பொழுது ஏற்படக்கூடிய ஒளியின் அலைநீள மாற்றத்தை இவர் தான் கண்டறிந்தார். எனவே தான் அந்த விளைவுக்கு இராமன் விளைவு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர், கொல்கத்தா பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் கழகம் ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார். இவர் நோபல் பரிசு மட்டுமல்லாமல், பாரத ரத்னா, லெனின் அமைதி பரிசையும் பெற்றவர். இது மட்டுமல்லாமல் வயலின், மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அதன் பின் தானக்கென இராமன் ஆய்வுகூடம் எனும் இடத்தை நிறுவி அங்கேயே தனது வாழ்நாளின் கடைசி காலத்தையும் கழித்துள்ளார். 7 நவம்பர் 1888 இல் பிறந்த இவர், தனது 72 ஆவது வயதில் 21 நவம்பர் 1970 இல் இயற்கை எய்தினார். இவர் மறைந்திருந்தாலும் இயற்பியல் உலகிலும் அறிவியல் கூடங்களிலும் இவரது கண்டுபிடிப்புகளுக்கென தனி மரியாதையும் மதிப்பும் உள்ளது.

author avatar
Rebekal