தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடி பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடி பணியிட மாற்றம்.

சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஷ்வநாதன், மதுரை காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த  மாற்றத்தில் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.ஜி.,யாகவும், 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.,யாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தமிழக செயலாக்க ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்படுத்துள்ளார். மதுரை காவல் ஆணையர் டேவிட் தேவாசீர்வாதம் தொழிநுட்ப பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை காவல் ஆணையராக டேவிட் தேவாசீர்வாதம், இடமாற்றம் செய்யப்பட்டு காவல் ஆணையராக பிரேமானந்த் சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை டிஐஜி லோகநாதன் திருச்சி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை டிஐஜி கார்த்திகேயன் திருப்பூர் காவல் ஆணையராக காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜியாக ரவி சிறப்பு காவற்படை ஈரோடு பிரிவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் டிஐஜி தேன்மொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய்குமார்  சென்னை தொழில் நுட்பப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.