36வது தேசிய விளையாட்டு போட்டி – ஸ்குவாஷ் ஆடவர் அணிக்கு தங்கப்பதக்கம்!

6வது தேசிய விளையாட்டு போட்டியில், ஸ்குவாஷ் ஆடவர் அணியில் 4பேர் தங்க பதக்கம் வென்று அசத்தல்.

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்குவாஷ் ஆடவர் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. அதன்படி, ஸ்குவாஷ் ஆடவர் அணியில் அபய் சிங், வேலவன் செந்தில்குமார், ஹரிந்தர் பால் சிங் சந்து, நவநீத் பிரபு ஆகிய 4 பேர் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இதுபோன்று, ஸ்குவாஷ் மகளிர் அணிப்பிரிவில், சுணன்யா குருவிலா, ராதிகா சீலன், ஷமீனா ரியாஸ், பூஜா ஆர்த்தி ரகு, ஆகிய 4 பேர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

தமிழம் வீரர் மனிஷ் சுரேஷ்குமார் 2-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜூன் காதேவை வீழ்த்தி டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் ஷர்மதா பாலுவை (2வது செட்டின் போது ஓய்வு பெற்றவர்) தோற்கடித்து ஜீல் தேசாய் தங்கம் வென்றார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment