காஷ்மீரில் பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்து.. 36 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் உள்ள செனாப் ஆற்றில் இன்று பிற்பகல் பேருந்து கவிந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு பிரிவின் தோடா மாவட்டத்தின் அசார் என்ற இடத்தில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் இருந்த சுமார் 36 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் 25 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சங்கரய்யாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு.! மனம் வருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

எஸ்எஸ்பி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது. கிஷ்த்வார் ஜம்மு NH 244 இல் தோடாவில் இருந்து 15 கிமீ தொலைவில் ராகினல்லா அசார் அருகே இந்த சோகமான விபத்து ஏற்பட்டது.

வழித்தடத்தில் மூன்று பேருந்துகள் ஒன்றாக இயங்கியதாகவும், ஒன்றையொன்று முந்திச் செல்லும்போது இந்த பெரும் விபத்து நடந்துள்ளதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது. அதாவது, பஸ் கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கி சென்று கொண்டிருந்த JK02CN-6555 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து, Batote-Kishtwar தேசிய நெடுஞ்சாலையில் அசார் அருகே சாலையில் இருந்து சறுக்கி 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மறுபக்கம் பனி மூட்டம் காரணமாக விபத்து நடந்ததாக தகவல் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை தீவிர நடத்தி வருகின்றனர். மேலும், தோடாவில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ரகினல்லா அசார் அருகே விபத்து நடந்தபோது 50க்கும் மேற்பட்டோர் பேருந்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்