பாரிஸ் விமான நிலையத்தில் 3 நாளாக தவித்த 300 இந்தியர்கள்.? நீதிபதிகள் அதிரடி உத்தரவு.! 

ருமேனியாவை தளமாகக் கொண்ட லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஏர்பஸ் ஏ-340-வானது கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் நிகரகுவா எனும் இடத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 303 பயணிகள் பயணித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அதில் 11 சிறார்களும் அடக்கம்.

.24 மணிநேரத்தில் 201 பேர் பலி.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிடம் வலியுறுத்தல்.!

இந்த விமானமானது, இடையில் எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி எனும் விமான நிலையத்தில் நின்றது. அப்போது அந்த விமானத்தில் சுமார் 300 இந்தியர்கள். அதில் 11 சிறார்கள் துணைக்கு யாருமில்லாமல் இருந்ததை அறிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் துபாயில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்பதும் , தற்போது அமெரிக்கா அல்லது கனடா செல்லல திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக சந்தேகத்தின் பெயரில் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அந்த விமானம் வத்ரி விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. ஒரே நேரத்தில் இதனை பேர் ஒரே விமானத்தில் அதுவும் 11 சிறார்களுடன் அமெரிக்கா செல்ல முனைந்ததை கவனித்த உடன் விமானத்தில் உள்ள சிலர் கடத்தப்பட்டு இருக்கலாம் என விமானத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து வைத்துள்ளனர்.

அவர்களிடம் கடந்த 3 நாட்களாக பாரிஸ் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை நேற்று முழுதாக நிறைவு பெற்று இன்று காலை 10 மணி அளவில் (இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி) புறப்பட்டு இந்தியா , மும்பை செல்ல பாரிஸ் நீதிபதி உத்தரவி ட்டார்.  3 நாட்களாக விமான நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகளுக்கு வத்ரி விமான நிலையத்தில் உணவு மற்றும் சூடான பானங்கள் தவிர, தற்காலிக படுக்கைகள் மற்றும் கழிப்பறைகள் ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.