சோபூரில் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

இன்று சோப்பூர் நகரில்  நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

By murugan | Published: Jul 12, 2020 08:53 PM

இன்று சோப்பூர் நகரில்  நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் நகரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சோபூர் நகரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே இன்று மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில்  மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். சோபூர் மாவட்டத்தின் ரெபன் பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் லஷ்கர்-இ-தைபா அமைப்பை சார்ந்த உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காஷ்மீர்  ஐ.ஜி.பி விஜய்குமார் தெரிவித்தார்.

அண்மையில் சோப்பூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎஃப்  மற்றும் ஒரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.

Step2: Place in ads Display sections

unicc