3 பட்டாசு ஆலைகள் இயங்க தடை – காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

காஞ்சிபுரத்தில் 3 பட்டாசு ஆலைகள் தற்காலிகமாக இயங்க தடை விதித்து காஞ்சிபுர ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 13-ற்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர்.

3 பட்டாசு ஆலைகள் தற்காலிகமாக இயங்க தடை

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் 3 பட்டாசு ஆலைகள் தற்காலிகமாக இயங்க தடை விதித்து காஞ்சிபுர ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். குடோனில் உள்ள வெடிபொருள்கள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்த பின் மீண்டும் பணி தொடரும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment