திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு – ஆட்சியர் விளக்கம்

3 குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் பரிசோதனைகளுக்கு பின்பே  தெரியவரும் என திருப்பூர் ஆட்சியர் விளக்கம். 

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர்  உயிரிழந்ததாகவும். மேலும் சில குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இதுகுறித்து, திருப்பூர் ஆட்சியர் 3 குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் பரிசோதனைகளுக்கு பின்பே  தெரியவரும். சிகிச்சை பெற்று வரும்சிறுவர்களின் சிறுநீர், மலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment