,
Guyana Cricket Stadium

2-ஆம் அரை இறுதி போட்டி ..! கயானாவில் மழைக்கு 80% வாய்ப்பு!

By

கயானா: நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் முதல் அரை இறுதி போட்டியானது இன்று காலை நடைபெற்றது. இதில் தென்னாபிரிக்கா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

மேலும், இதன் மூலம் 2024ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஐசிசி தொடரில் தென்னாபிரிக்கா அணி முதன்முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது 2ம் அரை இறுதி போட்டியானது இன்று வெஸ்ட் இண்டீஸ்ஸில் உள்ள கயானாவில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதவிருக்கிறது. இது வரை டி20 உலகக்கோப்பை தொடரில் 4 முறை நேருக்கு நேர் சந்தித்து கொண்ட இந்த இரு அணிகளும் 2-2 என வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

லீக் சுற்றுகளிலே வெளியேறும் தருவாயில் இருந்த இங்கிலாந்து அணி அவர்களது சிறப்பான விளையாட்டால் தற்போது அரை இறுதி போட்டி வரை தகுதி பெற்றுள்ளனர். அதே போல மறுமுனையில் இந்திய அணியும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெற இருக்கும் இந்த 2-வது அரை இறுதி போட்டியில் மழை பெய்ய 80% சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை மழை பொழிவு ஏற்பட்டு போட்டி நடத்த முடியாமல் போனால் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும். இந்த போட்டியில் இரவு 12.10 மணி வரையில் கால அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட சமயம் வரை போட்டி நடைபெறவில்லை என்றால் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய அணி லீக் சுற்றிலும், சூப்பர் 8 சுற்றிலும் 1 தோல்வியை கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதால் போட்டி தடைபட்டால் இந்திய அணி இறுதி போட்டியில் நுழைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023