கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச இன்டர்நெட் திட்டம் – தொடங்கி வைத்தார் முதல்வர்!

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாணவர்களுக்கான அணைத்து வகுப்புகளும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் இருக்கிறது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது, ஆனால் சில குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவர்கள் பலரால் கார்டு போட்டு படிக்க முடியவில்லை.

எனவே அவ்விதமான மாணவர்களுக்கு உதவும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகின்ற நான்கு மாதங்களுக்கு எல்காட் நிறுவனத்தின் மூலமாக 9.69 லட்சம் மாணவர்களுக்கு தினமும் 2 GB டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை இன்று முதல் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal