தமிழகத்தில் அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம்.. 5 வாரங்களில் 2700 பேர் பதிவு.! 

இறந்த பின்போ அல்லது மூளைச்சாவு அடைந்த பிறகோ ஒருவரது உடலில் செயல்பாட்டில் இருக்கும் உறுப்புகளை உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் ஒருவருக்கு தானமாக வழங்கும் உடல் உறுப்பு தான முறை தமிழகத்தில் பெருகி வருகிறது.

இதனை வரவேற்கும் வகையில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, உடல் உறுப்பு தானம் செய்தோரின் இறுதி சடங்கானது அரசு மரியாதையுடன் நடைபெறும் என் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் பாஜகவால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது -அமைச்சர் சேகர்பாபு

உடல் உறுப்பு தானம் செய்தவரின் இறுதி சடங்கில் அரசு சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்வார்கள் என்றும் முதல்வர் அரசாணையில் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி தமிழகத்தில் சமீப காலமாக சிலரது இறுதி சடங்கானது அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

இதனை அடுத்து , தற்போது தமிழக அரசு ஓர் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் கடந்த 5 வாரத்தில் மட்டும் 2,700 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர் என தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.