22 மாத கால திமுக ஆட்சிக்கு அங்கீகாரம்.. அமைச்சர் ரகுபதி பேட்டி!

அதிமுகவை பற்றி விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.

ஈரோடு கிழக்கு தொகுதி முடிவு என்பது 22 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், அதிமுகவை பற்றி விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை. தேர்தலுக்கு தேர்தல் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தான் செய்வார்கள், அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

மத்தியில் மாற்றத்தை கொண்டு வந்தால் தான் நாட்டை காப்பாற்ற முடியும். திராவிட இயக்கம் எதற்கும் அச்சப்படாது என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் பேட்டியளித்துள்ளார். இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, முதல்சுற்றில் காங்கிரஸ் – 8429, அதிமுக – 2873, நாம் தமிழர் – 526, தேமுதிக – 112 வாக்குகள் பெற்றுள்ளன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment