2024 புத்தாண்டு கொண்டாட்டம் – வழிகாட்டு நெறிமுறைகள்!

2023 வருடம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், மக்கள் அனைவரும் 2024-ஐ வரவேற்கத் தயாராகிவிட்டனர். அந்த வகையில், தலைநகர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போதுமே களைகட்டும் என்பதால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகரக் காவல் ஆணையர், கொண்டாட்டத்துக்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் போட்டியில்,  பைக் ரேஸில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் மீதான குற்றங்கள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெசன்ட் நகர் கடற்கரையில் 6வது அவன்யூ சாலைகள் மூடப்படும். சென்னை மாநகரம் முழுவதும் தானியங்கி கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு 18000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தூத்துகுடியில் நிவாரண பொருட்கள் வழங்கிய டி.ஆர்.! மயங்கி விழுந்ததால் பரபரப்பு.!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலைகளில் சாகசங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் எனவும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது என கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்தியவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது. வாடகை வாகனங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.