அமேசானின் உயர் அதிகாரிகள் உட்பட 20,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு..கம்ப்யூட்டர் வேர்ல்ட் அறிக்கை..!

அமேசான் பணிநீக்கம் காரணமாக உயர் அதிகாரிகள் உட்பட 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளது என்று கம்ப்யூட்டர் வேர்ல்ட் அறிவித்துள்ளது .

பல நாடுகளில் இயங்கி வரும் ஆன்லைன் சந்தை (E-commerce) நிறுவனமான அமேசான் ஏற்கனவே அறிவித்திருந்த ஊழியர்களை விட இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி சமீபத்தில் பணிநீக்க செயல்முறை சில மாதங்களுக்கு தொடரும் என அறிவித்திருந்தார்.

இதையடுத்து வரும் மாதங்களில் உலகம் முழுவதிலும் 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் என கம்ப்யூட்டர் வேர்ல்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் அமேசானின் உயர் அதிகாரிகள் உட்பட அனைத்து கீழ்மட்ட ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது. உள் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன், பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கு முன்னுரிமை அளிப்போம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment