டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஒரே மையத்தில் 2,000 பேர் தேர்ச்சி..!

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் ஒரே மையத்தில் 2,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது.

சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்காக 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் மார்ச் 24 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டது.

தற்பொழுது இந்த தேர்வில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 2000 பேர் தேர்வாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்த ஆகாஷ் பிரண்ட்ஸ் என்கிற என்கின்ற தனியார் ஐஏஎஸ் அகாடமியில் (TAF) இருந்து மட்டும் 2000 பேர் தேர்வாகியுள்ளனர்.

இதுகுறித்து அகாடமி தரப்பில், அவர்கள் அனைவரும் தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு ஆகியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இவ்வாறு நடப்பதற்கு சாத்தியமில்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் குரூப்-4 தேர்வில் முதல் 11 இடங்களில் ஆறு இடங்களை ஒரே தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment