உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. 20 பேர் பலி, 70 பேர் காயம்.!

Russian strikes: உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள குடியிருப்புப் பகுதியை நோக்கி ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

READ MORE –  CAA அமலாக்கம் கவலை அளிக்கிறது.. கருத்து கூறிய அமெரிக்கா! பதிலடி கொடுத்த இந்தியா!

மேலும் இந்த வான்வழி தாக்குதலில் ஒடேசா நகர குடியிருப்பு கட்டிடங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் எரிவாயு குழாய்கள் சேதமடைந்தாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, மார்ச் மாதத்தில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் இந்த கொடூரமான தாக்குதலுக்கு ரஷ்யா நியாயமான பதிலை பெறும் என்று தெரிவித்துள்ளார்.

READ MORE –  உணவுக்காக காத்திருந்தபோது நேர்ந்த சோகம்.! காசா தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு.!

உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக கருதப்படும் ஒடேசா நகரம், நீண்ட காலமாக ரஷ்ய தாக்குதல்களின் முக்கிய இலக்காக இருந்து வருகிறது.

குறிப்பாக கருங்கடல் வழியாக உக்ரேனிய தானிய ஏற்றுமதிக்கு பாதுகாப்பான பாதையை அனுமதித்த ஐ.நா-தரகர் ஒப்பந்தத்தை மாஸ்கோ கைவிட்ட பிறகு, மார்ச் 2ம் தேதி ரஷ்ய ஆளில்லா விமானம் பல மாடி கட்டிடத்தை தாக்கியதில் ஐந்து குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment