வேலூர் : விரைவு ரயிலில் கட்டு கட்டாக பணம்.. கிலோ கணக்கான தங்க நகைகள்.! போலீஸ் தீவிர விசாரணை.! 

வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் சோதனை செய்யும் போது ஒருவரிடம் 2.7 கிலோ தங்க நகைகள் மற்றும் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அண்மை காலமாக தமிழக முக்கிய ரயில்நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கஞ்சா, உரிமம் இல்லாத தங்க நகைகள், பணம் ஆகியவை அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

காவல்துறை சோதனை :

வேலூர், காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று இரவு அதே போல வழக்கமான சோதனையின் போது விசாகபட்டினத்தில் இருந்து கொல்லம் நோக்கி செல்லும் விரைவு ரயிலில் செல்லும் பயணி ஒருவரிடம் ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.

2.7 கிலோ தங்கம் :

அப்போது அவர் வைத்து இருந்த பையில் 2.7 கிலோ தங்கம் மற்றும் 35 லட்ச ரூபாய் பணம் ஆகியவை சிக்கியுள்ளது . இவற்றிற்கு உரிய ஆவணம் இல்லை என்பதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

வருமானவரித்துறை :

அந்த நபர் கோவையை சேர்ந்த அனந்த நாராயணன் என்பவர் ஆவர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் , நகை ஆகியவை வருமான வரித்துறையினர் வரளவைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போது அந்த நபர்வரு வருமான வரித்துறை விசாரணையில் இருக்கிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment