வரும் 19 முதல் பள்ளிகள் திறப்பு – அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு.!

பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா இன்னும் ஓயவில்லை, கல்வியை விட குழந்தைகளின் உயிர் முக்கியம்.  பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், நோய் தொற்றை யோசிக்கும்போது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். சமீபத்தில் பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் சில நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இது தற்போது இந்தியாவிலும் ஒருசிலருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசே கூறிருந்தது.

கொரோனா தடுப்பூசிகள் அடுத்த வாரம் அவசரகால பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், ஓரளவு நிலைமை சரியான பின்னர் பள்ளிகளை திறப்பதுதான் சரி என்று ஒரு மருத்துவராக நான் தெரிவிக்கிறேன். எனவே, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

30 mins ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

30 mins ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake விடீயோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

31 mins ago

தினமும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…

1 hour ago

உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார்! யுவராஜ் சிங் பேச்சு!

Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…

2 hours ago

பிரதமர் பதற்றத்தில் இருப்பது பேச்சிலேயே தெரிகிறது… ராகுல் காந்தி விமர்சனம்!

Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…

2 hours ago