மார்ச் 25-ஊரடங்கிலிருந்து 1,78,70,644 டிக்கெட்டுகள் ரத்து -ரயில்வே துறை!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து முழுவதுமாக முடங்கிய நிலையில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் தான் ரயில்கள், பேருந்துகள் என அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதிக்கு பிறகு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான பணம் பல பேருக்கு திருப்பி வழங்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சேகர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இது குறித்த தகவல்களை கேட்டிருந்தார். இதற்கு இந்திய ரயில்வே துறை அளித்துள்ள பதிவில் மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து தற்போது வரை, 1 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரத்து 644 டிக்கெட்டுகளை ரத்து செய்யப்பட்டுள்ளன என கூறியுள்ளது. மேலும் இதன் மூலம் 2727 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
author avatar
Rebekal